அவரவர் மொழியில்

அவரவர் மொழியில் 
பைபிள் (Bible) என்னும் ஆங்கிலச் சொல் பிப்லியா (Biblia) என்னும் கிரேக்கச் சொல்லினை அடிப்படையாகக் கொண்டது. இதன் பொருள் புத்தகங்கள் (Books) என்பதாகும். இது இறைநூல் என்பதனால் (Holy Bible) என அழைக்கப்படலாயிற்று. ஆனால் தமிழ் மாற்றம் செய்யப்படுகையில் அது 'பரிசுத்த வேத புத்தகம்' அல்லது பரிசுத்த வேதாகமம் என்றாயிற்று.

கிறிஸ்தவம் அப்போஸ்தலர்கள் காலத்தில் விரைந்து பெருகியது. பின்வரும் நூற்றாண்டுகளில் பரவிய கிறிஸ்தவம் அதன் பின் தொய்வு கண்டது. இதற்கு முக்கிய காரணம் 'அவரவர் மொழிகளில் அவரவர்க்கு நற்செய்தி' என்ற கோட்பாடு மறுக்கப்பட்டதுதான். வேதாகமத்தை வாசிக்கும் உரிமை சாமானியர்களுக்கு மறுக்கப்பட்டு, மொழிப்பெயர்ப்புகள் தடைசெய்யப்பட்டிருந்ததால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியும் தடைபட்டது.

அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவம் வளர்ந்து பெருகிய காலத்தை அடையாளம் காட்ட நினைத்தால், 16ம் நூற்றாண்டின் துவக்கத்திற்குத்தான் வரவேண்டியுள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா போன்ற இடங்களுக்கு மேல்நாட்டு மிஷனெரிகளால் கிறிஸ்தவம் கொண்டுசெல்லப்பட்டது, அந்த காலக்கட்டத்தில்தான். மிஷனெரிகளின் இந்த முயற்சி பெருமளவு வெற்றி பெற்றதற்கு மூலகாரணம் 'அவரவர் மொழிகளில் அவரவர்க்கு நற்செய்தி' என்னும் கோட்பாடு மறுபடியும் புரிந்துகொள்ளப்பட்டதாகும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் வேதாகமம் இன்றைக்கு கிட்டத்தட்ட 2000 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய புதிய மொழிகளில் மொழி பெயர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

No comments:

Post a Comment