Saturday, December 12, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 9


ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்பாக இத்தொடரை தொடர நேர்ந்தது நம்மவரின் சித்தம் என்று நம்புகிறோம். கடந்த முறை அந்நாளின் பர்மாவும், இந்நாட்களின் மியான்மர் என்று அறியப்பட்டிருக்கிற தேசத்தில்  உள்ள கரண் குடிகள் பற்றி நாம் பதிவு செய்தது நம் வாசர்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகிறோம்.  இந்த முறை ஜப்பான் தேசத்தின் ஷிண்டோ (神道 Shinto) மதம் பற்றி, அதில் உள்ள சில வியப்பூட்டும் விசித்திரங்கள் பற்றி பார்க்கலாம். 


ஜப்பானிய எழுத்தாளரான அறிமசா குபோ (Arimasa Kubo) ஜப்பானின் பாரம்பரிய மதமான ஷிண்டோ  (神道 Shinto) வில் உள்ள அனுசரிப்புகளைப் பற்றி எழுதும் பொழுது பல கேள்விகள் நமக்குள் எழுவது தவிர்க்க இயலாததாகிப் போகிறது. அவரின் பெரும் ஆதங்கம் கூட, அவரின் அந்த குறிப்புகளை காணும் பலரும், தங்களின் பல காரியங்களை மறுபரிசீலனை செய்து 'உண்மை'க்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் ஷிண்டோ (神道 Shinto) மதம் பற்றி, வலைத் தளத்தில் பார்த்த பொழுது, ஜப்பானியர்களின் பாரம்பரிய மதமான இது, அந்நிய தேசங்களில் இருந்து வந்த கிறிஸ்துவத்தையும், பௌத்தத்தையும் எதிர்க்கிறது, ஏற்றுக் கொள்வதில்லை என்று குறிப்புகள் இருந்தன.   பின்னணித் தகவலோடு இனி வருகிறவைகளை கவனியுங்கள்.


ஜப்பானில் உள்ள 'Nagano' பகுதியில், ஷிண்டோ மதத்தினருக்கான ஒரு முக்கியமான 'கெபி' உண்டு. அதன் பெயர் 'சுவா டைஷா' (SUWA TAISHA 諏訪大社) இந்த கெபி (அல்லது 'சிறுகோவில்') பகுதியில் காலா காலமாக ஏப்ரல் 15ம் தேதி வாக்கில் ஒரு பண்டிகை கொண்டாடப்படும். அதன் பெயர் 'ONTOH SAI'. இந்தப் பண்டிகையை எப்படி அனுசரிக்கிறார்கள் தெரியுமா? அது உங்களுக்கு ஆதியாகமம் 22ம் அதிகாரத்தில் வரும் பிரசித்தி பெற்ற அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும். ஆம் ஈசாக்கை ஆபிரகாம் பலியிட முயன்ற அந்த சம்பவம் தான். இந்த 'கெபி'யின் பின் பகுதியில் ஒரு சிறு மலை உண்டு. அதன் பெயர் 'மோரியா' (ஜப்பானிய மொழியில் மோரியா சான் "Moriya-san" என்று வரும்).


அந்த SUWA TAISHA ( 諏訪大社 ) பகுதியில் உள்ள மக்கள் மோரியா மலையின் கடவுளை ஜப்பானிய மொழியில் "மோரியா நோ கமி" ("Moriya no kami") என்று அழைக்கிறார்கள், இதன் அர்த்தம் "மோரியா மலையின் கடவுள்" என்பதாகும். மேலும், அந்தக் கெபியை (சன்னதி) மோரியா மலையின் கடவுளை வணங்குவதற்காக  கட்டப்பட்ட ஒன்று என்கிறார்கள். எனில் அந்த மோரியா மலையின் கடவுள் யார்?  பொறுங்கள், பார்ப்போம்.


அந்தப் பண்டிகையின் ஒரு நிகழ்வாக ஒரு பையனை/வாலிபனை ஒரு மரத்தூனில் கட்டி, மூங்கில்களினால் ஆன ஒரு படுக்கையில் கிடத்துவார்களாம். இந்த மரத் தூணை ஜப்பானிய மொழியில் "ஒனியே-பஷிரா"("oniye-bashira") என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதன் அர்த்தம் "sacrifice-pillar." (தியாகத் தூண்) என்பதாகும்.

ஷிண்டோ மத பூசாரி அல்லது ஆசாரியன் ஒரு கத்தியுடன் வருவார், அவனை வெட்டி கடவுளுக்கு பலியிட ஆயத்தம் செய்வார். ஆனால் கடைசியில் வருகிற ஒரு தூதர் (அவருமே ஷிண்டோ ஆசாரியன் தான்) அங்கு வந்து, அந்தப் பையனை விடுவிப்பார். பிறகு அதற்கு பதிலாக 75 மான்களை பலியிடுவார்களாம். இதில் ஒரு விஷேசம் என்னவெனில் அவைகளில் ஒன்றின் காது கிழிந்திருக்க வேண்டுமாம். ஏனெனில் அது முட்புதரில் சிக்கிக் கொண்டு, பலியிட கடவுளால் வைக்கப்பட்டிருக்கிற ஒன்று என்பது அவர்களின் எண்ணம்.
இதுவும் கூட ஈசாக்கிற்கு பதிலாக முட்புதரில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக் கடாவை எடுத்து நம் முற்பிதா ஆபிரகாம் பலி செலுத்தினதை நினைவுப் படுத்துகிறது அல்லவா?

அந்த ஆதி நாட்களில் ஜப்பானின் ஆட்டுக் கடாக்கள் இல்லாததால் இப்படி மான்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த 'மான் பலி' மிகவும் விசித்திரமானதும் கூட. ஏனெனில் ஷிண்டோ மத பாரம்பரியத்தில் விலங்குகளை பலியிடுவது என்பதே கிடையாது. அப்படியானால் இது எப்படி? இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில் பாஸ்கா (Pass over\ Pesakh - פֶּסַח) பண்டிகை காலங்களில் (இதுவும் பெரும்பாலும் ஏப்ரல் மாத பகுதிகளில் வருகிற யூத பண்டிகை. இது நிஸான் (נִיסָן) எனும் எபிரேய மாதத்தில் 14ம் தேதி மாலை துவங்குகிறது. இந்த வருடம் ஏப்ரல் 3ம் தேதி பண்டிகை அனுசரிக்கப் பட்டது. வருகிற புதிய வருடமான 2016 ல் ஏப்ரல் 22ம் தேதி அனுசரிக்கப் பட உள்ளது.) சமாரியாவில் உள்ள கெர்சோம் மலையில் (Mount Gerizim) சமாரிய ஆசாரியர்கள் 75 ஆட்டுக் கடாக்களை பலியிடுவார்களாம். யாருக்கு "யாவே" (Yahweh יהוה)க்கு.


இன்னும் ஒரு விஷேசம். இந்த பண்டிகையை ஷிண்டோ மதத்தினர் "மிஷாகுச்சி" கடவுளின் பண்டிகை என்று அழைக்கிறார்கள். இதன் ஆங்கில வார்த்தையைப் பாருங்களேன், "MISAKUCHI" பண்டிகை. இதை MI-ISAKU-CHI என்று பிரிக்கலாம். இதில் MI என்றால் பெரிய என்று அர்த்தமாம், ISAKU என்பது 'ஈசாக்' என்ற பெயராக இருக்கலாம்.  ஏனெனில் ஆங்கிலத்தில் ISSAC என்ற பெயர் எபிரேய மொழியில் Yitzhak (יִצְחָק) என்று வரும். தமிழிலும் கூட இதனால்தான் 'ஈசாக்' என்று வருகிறது. CHI என்பது அனேக ஜப்பானிய வார்த்தைகளின் இறுதியில் வருகிற ஒரு சொல். ஆக இந்தப் பண்டிகை காலப் போக்கில் 'சுவா' (SUWA) மக்கள் ஈசாக்கின் கடவுள் என்பதை ஈசாக்கையே குட்டி கடவுளாக மாற்றி இருந்திருக்க வேண்டும்.


மட்டுமல்ல, ஆபிரஹாம்-ஈசாக்கின் இந்த சம்பவத்தில் ஈசாக் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துவதை நாம் அறிவோம். விறகுக் கட்டையை சுமந்து செல்வதில் இருந்து, பலவைகளை நாம் சொல்ல முடியும். இந்த பண்டிகையில் அந்த பையன்/வாலிபன் சுமந்து போகிற கட்டையைப் பார்ப்பீர்கள் என்றால் நம் ஆண்டவர் சுமந்து சென்ற குறுக்கு கட்டையைப் போலவே இருப்பது ஒரு தற்செயலான ஒற்றுமை தான்.

சமீப வருஷங்களாக மான்கள் பலியிடப்படுவதில்லை. பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்காக, அதற்கு பதிலாக அது போன்ற பொம்மைகள் பயன்படுத்தப் படுகின்றன. இதோடு இந்த சம்பிரதாயம், இந்த பண்டிகையில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெகு, வெகு நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிற இந்த 'ONTOH SAI' சம்பிரதாயங்கள் நடத்திக் கொண்டு வருவது 'மோரியா குடும்பம்' என்று அழைக்கப்படுகிற மக்கள் தாம். அவர்களின் நம்பிக்கை இது... மோரியாவின் கடவுளுக்காக செய்யப்படுகிற காரணம், அந்த மோரியாவின் கடவுள் அவர்கள் மூதாதையர்களின் கடவுளாம். ஆதியாகமம் 22ல் வருகிற "மோரியா" மலையை இந்த நேரத்தில் நினைத்து பார்ப்பது இப்போது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இன்னொரு குறிப்பு சொல்கிறது, கடந்த 78 தலைமுறைகளுக்கும் மேலாக இது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறதாம். ஒரு விசேஷ விசித்திரம் என்னவெனில் ஜப்பானைத் தவிர வேறு எந்த ஒரு தேசத்திலும் இப்படி வேதாகம சம்பவமான ஆபிரகாம்-ஈசாக்கை தொடர்பு படுத்துகிற பண்டிகை அனுசரிக்கப் படுவதே இல்லை.

இது மட்டுமல்ல, இன்னும் பல ஆச்சர்யகரமான ஒற்றுமைகள் உண்டு. அவைகளையும் இப்போது பார்க்கலாம்.


இஸ்ரேல் மக்கள் நடுவே இருந்த ஆசரிப்பு கூடாரத்தை (Tabernacle מִשְׁכָּן [Mishkan] ) இரு பிரிவாக பிரிக்கலாம்.
1.பரிசுத்த ஸ்தலம் (HOLY PLACE) [מִקְדָּשׁ \ miqqedash]
2.மகா பரிசுத்த ஸ்தலம் (Holy of Holies) [ קֹדֶשׁ הַקֳּדָשִׁים \ Kodesh Hakodashim]
அதே விதமாக இந்த 'ஷிண்டோ' கெபியையும் பிரிக்க முடியும். இங்கு கைகொள்கிற பல முறைமைகளுக்கும், இஸ்ரேல் மக்களின் ஆசரிப்பு கூடாரத்தில் இருக்கும் முறைமைகளுக்கும் பல ஒற்றுமைகளை பார்க்க முடியும்.

ஷிண்டோ ஜப்பானியர்கள் இந்த பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக நின்றுதான் பிரார்த்தனை செய்வார்கள்.  அவர்கள் அதைத் தாண்டி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகக் கூடாது. ஷிண்டோ ஆசாரியர்கள் \ பூசாரிகள் மட்டுமே இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும். இந்த கெபிக்கு முன்பாக அதை அணுகுபவர்கள் பார்க்கத் தக்கதாக கொமைன்னு (KOMAINU) என்று அழைக்கப்படுகிற சிங்க முகமுள்ள சிலைகள் உண்டு!

நாம் சலோமொனின் தேவாலயத்திற்குப் போய்ப் பார்க்கலாமா. அங்கும் இது போன்ற சிங்க சிலைகள் இருப்பதைக் காண முடியும்.(1.இராஜாக்கள் 7:36, 10:19)
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.
1 இராஜாக்கள் 7:36       
וַיְפַתַּ֤ח עַל־הַלֻּחֹת֙ יְדֹתֶ֔יהָ וְעַל֙ [וַמִסְגְּרֹתֶיהָ כ] (מִסְגְּרֹתֶ֔יהָ ק) כְּרוּבִ֖ים אֲרָיֹ֣ות וְתִמֹרֹ֑ת כְּמַֽעַר־אִ֥ישׁ וְלֹיֹ֖ות סָבִֽיב׃ מלכים א 7:36  
For on the plates of the ledges thereof, and on the borders thereof, he graved cherubims, lions, and palm trees, according to the proportion of every one, and additions round about.
1 Kings 7:36
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச் சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது. 
1இராஜாக்கள் 10:19
שֵׁ֧שׁ מַעֲלֹ֣ות לַכִּסֵּ֗ה וְרֹאשׁ־עָגֹ֤ל לַכִּסֵּה֙ מֵאַֽחֲרָ֔יו וְיָדֹ֛ת מִזֶּ֥ה וּמִזֶּ֖ה אֶל־מְקֹ֣ום הַשָּׁ֑בֶת וּשְׁנַ֣יִם אֲרָיֹ֔ות עֹמְדִ֖ים אֵ֥צֶל הַיָּדֹֽות׃מלכים א 10:19
The throne had six steps, and the top of the throne was round behind: and there were stays on either side on the place of the seat, and two lions stood beside the stays.
1 Kings 10:19
ஷிண்டோ ஆசாரியர்கள் அணிகிற அங்கிகள் / ஆடைகளிலும் கொஞ்சம் குறைய தொங்கல்கள் உண்டு (உபாகமம் 22:12 ஐ போல).
நீ தரித்துக்கொள்கிற உன் மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.  
உபாகமம் 22:12
גְּדִלִ֖ים תַּעֲשֶׂה־לָּ֑ךְ עַל־אַרְבַּ֛ע כַּנְפֹ֥ות כְּסוּתְךָ֖ אֲשֶׁ֥ר תְּכַסֶּה־בָּֽהּ׃ ס         דְּבָרִים 22:12
Thou shalt make thee fringes upon the four quarters of thy vesture, wherewith thou coverest thyself.
Deuteronomy 22:12
இந்தத் தொங்கல்கள் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்க முடியும். நம் தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நித்திய கட்டளையாகும். இதை நாம் எண்ணாகமம் 15ம் அதிகாரம் 38 முதல் 41 வரை வாசிக்கிறோம்.
38. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.
דַּבֵּ֞ר אֶל־בְּנֵ֤י יִשְׂרָאֵל֙ וְאָמַרְתָּ֣ אֲלֵהֶ֔ם וְעָשׂ֨וּ לָהֶ֥ם צִיצִ֛ת עַל־כַּנְפֵ֥י בִגְדֵיהֶ֖ם לְדֹרֹתָ֑ם וְנָ֥תְנ֛וּ עַל־צִיצִ֥ת הַכָּנָ֖ף פְּתִ֥יל תְּכֵֽלֶת׃במדבר 15:38
Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribband of blue:            
Numbers 15:38
39. நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.
40. நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
41. நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 15:38-41
இஸ்ரேல் மக்கள் தங்கள் மனவிருப்பத்தின் படி நடக்காமல் கர்த்தருடைய கற்பனைகளின் படி நடப்பதற்காக தலைமுறை தலைமுறையாக ஒரு ஞாபகக்குறியாக இதை ஏற்படுத்தினார். இந்த தொங்கல்கள் தேவனுடைய வார்த்தை/வசனங்களைக் குறிக்கும். இதை இன்றளவும் இஸ்ரேல் மக்கள் அணிந்து வருகிறனர். இதை Tallit (טָלֵית) என்று எபிரேய மொழியில் அழைக்கின்றனர். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வஸ்திர ஓரத்திலும் இந்த தொங்கல்கள் இருந்தது. இதை நாம் வேதாகமத்தில் மாற்கு 5:27-34லூக்கா 8;43-48, மத்தேயு 9:20-22 ஆகிய வேத பகுதிகளில் காண்கிறோம். இந்த தொங்கல்கள் நமக்கு நினைவு படுத்துவது ஒன்றை தான் நாம் தேவனுடைய கற்பனைகளின் படி நடப்பது மட்டுமே.

மேலும் இஸ்ரேல் ஆசாரியர்கள் அணிகிற வெண்ணிற அங்கி அல்லது 'ஏபோத்'கள் (1.நாளாகமம் 15;27, 1.சாமுவேல் 2;18, 2.சாமுவேல் 6;14) அல்லது சணல் நூல் ஏபோத் (אֵפ֥וֹד) என்பவைகள் போலதான், இந்த ஷிண்டோ ஆசாரியர்களும் அணிவதுண்டாம்.
இன்னும் அவர்கள் தலையில் கட்டிக் கொள்கிற சிறு பெட்டியிலிருந்து (Tefillin תפילין) அவர்கள் ஊதுகிற எக்காள பூரிகைகள் (Shofar שׁוֹפָר) வரை பல ஒற்றுமைகள்.

இந்த Tefillin (תפילין) எனப்படும் சிறுபெட்டியை கர்த்தர் இஸ்ரேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறப்பட பண்ணின சமயத்தில் அவர்களுக்கு மோசேயின் வாயிலாக அடையாளமகவும், நினைவுக் கூறுதலுக்காகவும் கொடுத்ததாகும்.
8. அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
9. கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;
10. ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.
யாத்திராகமம் 13; 8,9,10
וְהָיָה֩ לְךָ֨ לְאֹ֜ות עַל־יָדְךָ֗ וּלְזִכָּרֹון֙ בֵּ֣ין עֵינֶ֔יךָ לְמַ֗עַן תִּהְיֶ֛ה תֹּורַ֥ת יְהוָ֖ה בְּפִ֑יךָ כִּ֚י בְּיָ֣ד חֲזָקָ֔ה הֹוצִֽאֲךָ֥ יְהֹוָ֖ה מִמִּצְרָֽיִם׃
שמות 13;9
And it shall be for a sign unto thee upon thine hand, and for a memorial between thine eyes, that the LORD'S law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.
Exodus 13:9
16. கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
யாத்திராகமம் 13: 16

 மேலும் இதைக் குறித்து உபாகமம் பகுதியிலும் வாசிக்கிறோம்...
6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
8. அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.   
உபாகமம் 6; 6-8
இறுதியாக இதைக் குறித்து மோசேயின் ஆகமங்களில் உபாகமம் 11ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர்கள் கையில் (Arm-Tefillin) கட்டிக் கொள்ளும் பெட்டியை Shel-Yad என்றும்,  தலையில் (Head-Tefillin) கட்டிக் கொள்ளும் பெட்டியை Shel Rosh என்றும் எபிரேய மொழியில் அழைக்கின்றனர்.
18. ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு,
19. நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
20. அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.
உபாகமம் 11;18-20
எனவே இஸ்ரேல் மக்கள் இதை காலாகாலமாக வருகின்றனர். ஒரு சிறு பெட்டிக்குள் தோற்சுருளில் நியாயப்பிரமாண வசனங்களை எழுதி  வைத்து  தங்கள் நெற்றிகளில் இரு கண்களுக்கும் நடுவேயும் தங்கள் கரத்திலும் கட்டிக் கொள்கின்றனர்.   இவற்றை இயேசு கிறிஸ்துவும் மத்தேயு 23ம் அதிகாரம் 5ம் வசனத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதை  போலவே ஷிண்டோ மத "Yamabushi" களும் தங்கள் நெற்றிகளில் இது போன்ற சிறு பெட்டியை கட்டிக் கொள்ளுகின்றனர், இதை அவர்கள் "Tokin" (頭襟, ときん) என்று அழைக்கின்றனர். இந்த இரு பெட்டிகளின் அளவும்  கிட்டத்தட்ட ஒரே அளவு தான். ஆனால் இந்த "Tokin"  வட்ட வடிவ பூ போன்ற வடிவமுடையது.

மேலும் ஷிண்டோ மத ஆசாரியர்களான இந்த "Yamabushi"கள் பெரிய கடற் சங்கு போன்ற ஒரு கொம்பை பயன்படுத்துகின்றனர். இது இஸ்ரேல் மக்கள் பயன்படுத்துகிற எக்காளத்திற்கு (Shofar-שׁוֹפָר) மிகவும் ஒத்துப் போகிறது.இஸ்ரேல் மக்கள் விலங்குகளின் (ஆடு, செம்மறி ஆடு) கொம்பை எக்காளத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஜப்பானிலே ஆடு, செம்மறி ஆடு போன்றவை இல்லாத காரணத்தினால் இந்த "Yamabushi"கள் கடற் சங்கை பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானின் பழங்கால வார்த்தைகளுக்கு எபிரேய மொழி மூலமாக விளங்கியுள்ளது. ஜோசப் ஐடேல்பர்க் (JOSEPH EIDELBERG) என்ற யூதர் ஜப்பானிற்கு வந்து, ஜப்பானியர்களின் ஷிண்டோ கோவில்களில் கோவில்களில் பார்வை செய்துள்ளார். இவர் "The Japanese and the Ten Lost Tribes of Israel" எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் அனேக ஜப்பானிய வார்த்தைகள் பண்டைய எபிரேய மொழியை மூலமாக கொண்டுள்ளது என குறிப்பிடுகிறார்.
உதாரணமாக ஜப்பானியர்கள் சொல்லும் "hazukashime" எனும் வார்த்தை அவமானம் (humiliation\disgrace) எனும் அர்த்தப்படுகிறது. இதை எபிரேய மொழியில் "hadak hashem" என்று வருகிறது.  உதாரணமாக யோபு 40:12 ஐ காண்க...
רְאֵ֣ה כָל־גֵּ֭אֶה הַכְנִיעֵ֑הוּ וַהֲדֹ֖ךְ רְשָׁעִ֣ים תַּחְתָּֽם׃            איוב 40;12
Look on every one that is proud, and bring him low; and tread down the wicked in their place.Job 40:12
கிட்டத்தட்ட இவற்றின் உச்சரிப்பு, அர்த்தம் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளது.  மேலும் சில ஒத்த அர்த்தமுள்ள எபிரேய ஜப்பானிய வார்த்தைகளை பின்வருமாறு காணலாம்:


ஜப்பானியர்கள் ஒரு பகுதியின் தலைவனை "Agata-nushi" எனும் பண்டைய ஜப்பானிய வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இதில் "Agata" என்பது "பகுதி"யையும்(area),  "nushi"என்பது தலைவனையும் (leader) குறிக்கும்.இதை எபிரேய மொழியில் "aguda" மற்றும் "nasi" .என்பர்.
ஜப்பானிய சாம்ராஜ்யத்தில் உள்ள வீட்டின் தலைவாசல் முகப்பிற்கும் எருசலேம் வாசலுக்கும் (Gate of JERUSALEM) உள்ள ஒற்றுமை கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய சாம்ராஜ்யத்தில் உள்ள வீட்டின் தலைவாசல் முகப்பில் 16 இதழ்களை கொண்ட வட்ட வடிவ பூ போன்ற ஒரு வடிவம் உள்ளது. இந்த சூரியக்காந்தி பூ போன்றதொரு வடிவம் எருசலேமில் உள்ள ஏரோதின் வாசலில் உள்ளது. பண்டைய காலத்திலிருந்தே ஜப்பானில் இந்த வடிவம் இருந்துள்ளது. ஏரோதின் வாசலிலும் இந்த 16 இதழ்களை கொண்ட பூ போன்ற வடிவம் இரண்டாம் தேவாலய காலக்கட்டத்திலிருந்தே எருசலேம்  பீடத்தில் காணப்படுகிறது.
யூதர்களின் மிக முக்கிய அடையாள சின்னமான தாவீதின் நட்சத்திரம் (Star of David) ஜப்பான் சாம்ராஜ்யத்தின் உச்சியில் பொறிக்கப்பட்டிருப்பது இன்னும் நமக்கு ஆச்சரியத்தைக் கூட்டுகிறது. இதை ஜப்பானியர்கள் ககோமே உச்சி (Kagome crest) (籠目, kagome) என்றழைக்கின்றனர்.
ஜப்பானியர்களின் "Mizura" (みずら) மற்றும் இஸ்ரேலர்களின் "Payot/peyot"  (פֵּאָה ‎/ פֵּאוֹת) இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கலாமா? "Mizura" (みずら) என்பது பண்டைய ஜப்பானிய ஆண்களின் சிகை அலங்காரத்தின் (hairstyle) பெயராகும். "Payot" (פֵּאָה ‎/ פֵּאוֹת) என்பது இஸ்ரேலர்களின் சிகை அலங்காரத்தின் பெயராகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படம், 5ம் நூற்றாண்டில் ஜப்பானில் உள்ள "Nara" பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய ஜப்பானிய சாமுராயின் (Samurai) சிலையாகும். இவர்களின் முடி அவர்களின் கீழே இரண்டு காது ஓரங்களிலும் நிற்கும். இந்த வகை காது ஓர சுருள் முடி அமைப்பு ஜப்பானிய சாமுராய்களின் மத்தியில் அதிகமாக காணப்பட்டது.
இது ஏதோ வெறும் தற்செயலாக அமைந்தது இஸ்ரேலர்களின் "Payot" வுடன்  இது மிகவும் ஒத்துப்போகிறது. இவர்களும் கூட நாம் மேலே வலது பக்கம் உள்ள படத்தில் காண்பதை போல தங்கள் இரண்டு காது ஓரங்களிலும் சுருள் முடியை வளர்க்கும் பழக்கத்தை காலங்காலமாக இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். இஸ்ரேலர்கள் இதை மோசேயின் காலத்திலிருந்தே கொண்டுள்ளனர். இதை குறித்து வேதாகமத்தில் லேவியராகமம் 19:27ல் குறிப்பிட்டுள்ளது.
"உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக்   கத்தரிக்காமலும், "                         
லேவியராகமம் 19;27  
לֹ֣א תַקִּ֔פוּ פְּאַ֖ת רֹאשְׁכֶ֑ם וְלֹ֣א תַשְׁחִ֔ית אֵ֖ת פְּאַ֥ת זְקָנֶֽךָ׃       ויקרא 19;27                               
Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.   
Leviticus 19:27
ஆகையால், இந்த பழக்கம் பண்டைய இஸ்ரேலர்களிடமிருந்தே தொடங்கி வந்திருக்க வேண்டும்.

மேலும் நம் வேதாகமத்தில் உள்ள வம்ச வரலாறுக்கும்,ஜப்பானிய புராணக் கதைகளுக்குமிடையே உள்ள ஒற்றுமையை காணப் போகிறோம். மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஒற்றுமை இரண்டிற்கும் உள்ளது. ஒரு ஜப்பானிய அறிஞர் ஜப்பானிய புராணக் கதையில் வரும் நிஞ்சி (Ninji) யின் கதை நம் வேதாகமத்தின் (Jacob/Isarel) யாக்கோபோடு ஒத்துப் போவதை சுட்டிக் காட்டுகிறார். ஜப்பானிய புராணத்தில் நிஞ்சி (Ninji) என்பவன் ஜப்பானியர்களின் ஏகாதிபத்திய குடும்பத்தின் மற்றும் "யமட்டோ" தேசத்தாரின் மூதாதையர் ஆவான். இவனுடைய சந்ததிகளே "யமட்டோ" கோத்திரத்தார் அல்லது ஜப்பானியர் ஆவர்.

 
 


பெந்தகோஸ்தே, கூடாரப் பண்டிகைகளில் ஆசாரியர்கள் கதிர்க்கட்டை கர்த்தரின் சந்நிதியில் (லேவியராகமம் 23:11) அசைவாட்டுவது போலவே, ஜப்பானிய ஷிண்டோ ஆசாரியர்கள் எதையாகிலும்  புனிதப்படுத்தும் பொழுது, ஒரு மரக்கிளையை அசைவாட்டுவது உண்டு. அந்த சாங்கியம் இன்று சற்றே மாறிப் போய், விசிறி மடிப்பாக மடிக்கப்பட்ட காகிதங்களை அசைக்கிறார்களாம்.












பரிசுத்த வேதாகமத்தில் 1நாளாகமம் 15ம் அதிகாரத்தில் தாவீது ராஜா, தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்த சம்பவம் எழுதப்பட்டுள்ளது.

"25. இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.
26. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27. தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.
28. அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்."1.நாளாகமம் 15:25-28
இஸ்ரேல் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லும் ஆசாரியர்கள், தங்கள் தோள்களின்மேல் உடன்படிக்கைப் பெட்டியின் தண்டுகளை வைத்து சுமந்து செல்வார்கள் (1.நாளாகமம் 15:15)

உடன்படிக்கைப் பெட்டியின் மேல் பெரிதாய் தன் இறக்கைகளை விரித்திருக்கும் இரண்டு தங்க கேரூபீன்களைப் பற்றி நமக்குத் தெரியும். இங்கு ஜப்பானில் இதுப் போன்ற பெட்டியை 'OMIKOSHI' என்று அழைப்பர். இந்த  'OMIKOSHI' யின் மேலும் HO-OH என்று அழைக்கப்படுகிற தங்கப் பறவை தன் சிறகுகளை விரித்திருக்கும்.





































இந்த பெட்டியையும் ஷிண்டோ ஆசாரியர்கள் தோளில் தான் அதன் தண்டுகளை வைத்து சுமந்து செல்வார்கள். மட்டுமல்ல, சுமந்து செல்லப்படும் பெட்டியின் முன்பாக வாத்தியங்கள் வாசிக்கப்பட நடனமாடிக் கொண்டே ஆரவார சத்தத்தோடு செல்வதும் உண்டு.

இஸ்ரேலின் உடன்படிக்கைப் பெட்டியின் அளவு, மற்றும் மாதிரியைக் குறித்து தேவனாகிய கர்த்தர் மோசேயிடம் யாத்திராகமம் 25:10-15 வசனங்களில் குறிபிட்டுள்ளார். இஸ்ரேலின் உடன்படிக்கை பெட்டி முழுவதுமாக பசும்பொன் தகட்டால் மூடப் பட்டிருக்கும். அப்படியே ஜப்பானியர்களின் இந்த 'OMIKOSHI' பெட்டியின் சில பகுதிகளில் பொன்னினால் மூடப்பட்டிருக்கும், சில நேரங்களில் முழு பெட்டியும் பொன்னினால் மூடப்பட்டிருக்கும்.


10. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.


"11. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,


12. அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,


13. சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,


14. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.


15. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்."                                           

யாத்திராகமம் 25:10-15

இந்த 'OMIKOSHI' யின் அளவும் கொஞ்சம் குறைய இஸ்ரேல் மக்களின் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அளவே இருப்பது இன்னொரு வியக்கும்படியான ஆச்சர்யம். இன்னும் உள்ள வேறு பல ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டே போக முடியும்.

இதில் உச்சக்கட்டமாக ஒன்று சொல்லலாம். இந்த பெட்டியினுள் வைக்கப்படுகிறவைகளுள் கண்ணாடி ஒன்று உண்டு. அதை எளிதில் எவரும் பார்த்து விட இயலாது. மிகவும் பவித்திரமாக அது பாதுகாத்து வைக்கப்படுகிறது. அந்தக் கண்ணாடியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலம், அதன் கருத்துக்கள் பற்றி பல விதமான கூற்றுக்கள் உண்டு. பலர் அதன் பொருளை அறிய முற்பட்டிருக்கின்றனர். பல அறிஞர்கள் இவை ஜப்பானிய மொழியின் கூறுகளை அளவு கோலாக அல்லது அடிப்படையாக கொண்டு பார்க்கக் கூடாது என்றும், அதை எபிரேய மொழி எழுத்துக்களின், அதுவும், ஆதி எபிரேய மொழியின் எழுத்து வடிவங்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

ஜப்பானிய ஆதி எழுத்துகள் (Jindai-moji) மேலிருந்து, கீழாகவே எழுதப்பட்டன. ஆனால், அந்த கண்ணாடியில் உள்ள எழுத்துக்கள் அப்படியாக இல்லாமல் நேரிடையாக எழுதப்பட்ட எழுத்துகளைப் போல சொல்லப்போனால், வலமிருந்து இடமாக (எபிரேய மொழியும் வலமிருந்து இடமாகவே தொடங்குகிறது.) எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். சரி அந்த கண்ணாடியின் நடு மைய வட்டத்தில் எழுதி இருப்பது என்னவென்று பார்க்கலாமா? "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்று தமிழில் பொருள்படும் வாக்கியமே இங்கு வந்துள்ளது. நம் தேவனாகிய கர்த்தர் யாத்திராகமம் 3:14ல் மோசேயிடம் தன் நாமத்தை வெளிப்படுத்தின அதே வார்த்தை தான். ஆங்கிலத்தில் சொல்வதென்றால், "I Am that I Am" என்றும், எபிரேயத்தில் "ehyeh aser ehyeh" என்றும் வருகிறது.மற்றும் சிலர் இதை "யெஹொவாவின் வெளிச்சம்" (YAHWEH's Light) என்றும் வாசிக்கின்றனர். எபிரேயத்தில் "Or YAHWEH" என்று வருகிறது. Or என்பதற்கு வெளிச்சம் என்று அர்த்தம். இதை வாசிக்கும் போது யோவான் முதலாம் அதிகாரம் 1முதல் 4 வரை உள்ள வசனங்கள் நினைவுக்கு வருகிறது.
இவைகள் எல்லாமே ஒரு தகவலை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. 'ஷிண்டோ' மதம் இப்போது எதுவாக, எப்படியாக இருந்தாலுமே, அதன் வேர்கள், ஆதி நாட்களின் வேர்கள் இஸ்ரேல் தேசத்திலிருந்து பிரிந்து போன கோத்திரத்தாராக இருந்திருக்கக் கூடும் என்பது தான். பண்டைய இஸ்ரேல் 12 கோத்திரங்களை உடையது. அவை கி.மு.933ல் யூதா தெற்கு ராஜ்யமாகவும், மீதமுள்ள 10 கோத்திரங்கள் வடக்கு ராஜ்யமாகவும் பிரிந்தது.  இந்த தெற்கு ராஜ்யத்தின் சந்ததிகள் யூதர்கள் என்று அழைக்கிறோம். வடக்கு ராஜ்யத்தை சேர்ந்த கி.மு.722களில்  அசீரிய படையெடுப்பில் நாட்டை விட்டுக் கொண்டு செல்லப் பட்டனர். அவர்கள் உலகத்தின் நான்கு மூலைகளுக்கும் பரவி சிதறடிக்கப்பட்டனர். இவர்களின் முக்கிய பிரச்சினையே, மற்ற அந்நிய மதங்களின் காரியங்களோடு ஒன்றிணைந்துப்  போனது தான் என்கிற சரித்திரங்களை நாம் அறிவோம். 

இங்கேயும் பாருங்கள் வந்து தங்கின இடத்தில், இங்கே பார்ப்போமென்றால், ஜப்பானில் அங்கிருந்த பல நம்பிக்கைகளையும், கருத்துகளையும் உள்ளடக்கிக் கொண்டு, இன்னொரு புது வடிவாய், ஒரு விதத்தில் "ஷிண்டோ" மதமாக மாறிப் போயிருந்திருக்கலாம். மெய்யான தேவனாகிய "யாவே" YHWH (יהוה)ஐ அறிந்திருந்தும், அதில் அந்த விசுவாசத்தில் உறுதியாக தரித்திருக்காவிடில் கறைப்பட்டு போகிற கதைகளின் இன்னொரு நிரூபணம் இது என்று யூகிக்க முடியும்.

இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜப்பானிய எழுத்தாளரின் ஆதங்கம் என்னவெனில், தங்களின் வேர்களை இப்படியாக அறிந்துக் கொள்பவர்கள், தாங்கள் திசை மாறிப் போனதை அறிந்து, உணர்ந்து, மறுபடியுமாக அவரிடமே, தேவ குமாரனாகிய "யேஷுவா" விடமே திரும்ப வேண்டும் என்பது தான். இஸ்ரேலர்களும், யூதர்களும் மாம்சத்தில் "இதோ ஆணி இதோ கை" என்று வெளிப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் மேசியாவாகவும், ஆதி நாட்களில் தங்கள் முன்னோர்கள், மோசே போன்ற தீர்கத்தரிசிகளோடு பேசின தேவன் இவர்தான் என்பதையும், இவரே மாம்சத்தில் இந்த சகல உலக பாவங்களுக்காக அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி என்பதையும், இவரே நம்முடைய பாவங்களை சுமந்து  தீர்த்து, நம்மை இரட்சிக்க வந்த இரட்சகர் என்பதையும், மேலும் இவரே நம்மை நித்திய நித்தியமாக அரசாளும், யூத ராஜ சிங்கம் என்பதையும் புரிந்துக் கொண்டு, அவரிடமே திரும்ப வேண்டும் என்பதே நம்முடைய ஆசையும், நம் தேவனை நோக்கி செய்யும் இடைவிடாத விண்ணப்பமுமாயிருக்கிறது.
 I Am that I Am (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה, ehyeh aser ehyeh)   
YHWH (יהוה)
இதோ ஆணி  இதோ கை   - BEHOLD NAIL BEHOLD HAND 
-எட்வினா ஜோனஸ்