மூலமொழியும் ஆரம்பகால மொழிப்பெயர்ப்புகளும்

சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு வித்திட்ட மார்ட்டின் லூத்தரின் ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு வேதாகம சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் காவலில் இருந்த போது இம்மொழிபெயர்ப்பைச் செய்தார். ஜெர்மானிய மொழிப்பெயர்ப்புக்குப் பின்னர் வேதாகமம் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தின் முதல் மூன்று மொழிப்பெயர்ப்பாளர்களும் (Bartholomew Ziegenbalg, Benjamin Schultze, Philip Fabricius) ஜெர்மானியர்கள் தான்.
இறை வார்த்தையை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக தனது தாய்மொழியில் அறிய வேண்டும் என்பதே சீர்திருத்த இயக்கத்தின் கொள்கையாக இருந்தது. உலகமெங்கும் இந்த இயக்கம் பரவிய போது, அந்தந்த பிராந்திய மொழிகளில் வேதாகமம் மொழிப்பெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. இன்றைக்கு சுமார் 2123 உலக மொழிகளில் வேதாகமம் முழுமையாகவும், சிறு சிறு பகுதிகளாகவும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. வேதாகம மொழிப்பெயர்ப்பு பரவிய பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வில் அது பெரிய பண்பாட்டுத் தாக்கங்களை நிகழ்த்தியது.
No comments:
Post a Comment